
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றிவிட்டதாக கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு 12 வாரத்திற்குள் விஜயலட்சுமி புகார் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நாளை காலை நேரில் ஆஜராக வேண்டும் என சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது அதனை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கிழித்ததோடு சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விஜயலட்சுமி தற்போது சீமானுக்கு எதிராக ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, முதலில் விஜயலட்சுமி யாருன்னு தெரியாதுன்னு சொன்னீங்க. அப்புறம் என்னை காங்கிரஸ் கூட்டிட்டு வந்தாங்கன்னு சொன்னீங்க. நான் உங்கள் மீது கேஸ் கொடுத்த போது பாஜக என்னை கூட்டிட்டு வந்தாங்கன்னு சொன்னீங்க. கடந்த 2023 ஆம் ஆண்டு மதுர செல்வத்தை வைத்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தீங்க. அப்போது மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறேன் என்னை பற்றி எங்கேயும் பேசாதே என்று கூறினீர்கள். அதேபோன்று எனக்கு பணமும் அனுப்பினீர்கள். என்கிட்ட வீடியோலாம் வாங்கினீங்க.
இன்று திமுகவினர் தான் விஜயலட்சுமியை அழைத்து வந்துள்ளார்கள் என்னால் சமாளிக்க முடியவில்லை அந்த அம்மாவை அழைத்து வாருங்கள் நானும் வருகிறேன் எங்கள் இருவரையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்துங்கள் என்று கூறினார். இது பற்றி அவர் கூறும்போது நான் இங்கேதான் இருக்கிறேன் நேரில் வாங்க உங்களை பார்த்து எப்படி இருக்கீங்க என்று கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். என்னோட பாவம் உங்களை சும்மா விடாது இன்னும் என்னவெல்லாம் பண்ணப்போகுது என்று பாருங்கள் என்று கூறினார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை விஜயலட்சுமி புதிய குற்றச்சாட்டு pic.twitter.com/SsjOgaPeSJ
— Barakath Ali (@sambarakathali) February 27, 2025