பாகிஸ்தானைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் விசித்திரமான முறையைக் கையாண்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வழக்கமாக பல் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகளுக்குப் பதிலாக, இவர் சமையலறைக்கு பயன்படுத்தும் ஸ்பூனில் பற்பசையை வைத்து, அதை நேரடியாக நோயாளியின் பல்லில் தேய்த்து வினோத சிகிச்சை அளிக்கிறார்.
இந்தச் செயலைப் பார்க்கும் போதே இது முறையான மருத்துவமா அல்லது நகைச்சுவையா என்ற சந்தேகம் எழுவதோடு, பார்ப்பவர்களைச் சிரிக்கவும் வைக்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, “இது என்ன உலக மகா டெக்னாலஜி?” என கிண்டல் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்நிலையில் முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால் இதுபோன்ற வினோத முறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்களா அல்லது இது வெறும் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் மருத்துவர் மிகவும் சீரியஸாக இந்த வேலையைச் செய்ய, சிகிச்சையைப் பெறும் நோயாளி எவ்வித சலனமும் இன்றி அமர்ந்திருப்பதுதான் இந்த வீடியோவின் ஹைலைட். எத்தனையோ வினோத வீடியோக்களை நாம் பார்த்திருந்தாலும், இந்த’ஸ்பூன் சிகிச்சை’ இணையவாசிகளைப் பெருமளவில் கவர்ந்துள்ளது.
