உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில், போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல் ஸ்கூட்டியில் ஆபத்தான முறையில் பள்ளிச் சிறுவர்களை அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியில் 5 முதல் 6 சிறுவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்; இதில் ஒரு சிறுவன் ஸ்கூட்டியின் முன் பகுதியில் நின்றுகொண்டும், மற்றவர்கள் இருக்கையில் நெருக்கியடித்தும் அமர்ந்துள்ளனர்.

“>

 

குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் செயல் காண்போரை உறைய வைத்த நிலையில், அந்த நபரின் பொறுப்பற்றத்தனத்திற்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.