தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினரான பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்து பேச ஆரம்பித்தார். என் நெஞ்சில் குடியிருக்கும் என பேச ஆரம்பித்தபோது அரங்கம் அதிர்ந்தது. இதனையடுத்து விஜய் கூறியதாவது, பெரிய பெரிய கட்சிகளுக்கு பூத் ஏஜென்ட் தான் பலம். நமது கட்சிக்கு பூத் கமிட்டி மாநாடு நடத்த போகிறோம். அன்றைக்கு தெரியும் தமிழக வெற்றிக் கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்ததில்லை என்று.
இப்போ புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள். மும்மொழி கொள்கை என்று. இதை இங்கு செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்க மாட்டார்களாம். இதை பார்த்தால் எல்கேஜி பசங்க சண்டை போட்டுக்குற மாதிரி இருக்கு. எந்த பாசிசமும் பாயாசமும்.. அதாங்க நம்ம அரசியல் எனிமியும், கொள்கை எனிமியும் பேசி வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடித்துக் கொள்வார்களாம்.
அதை மக்கள் நம்ப வேண்டுமா? இது ரொம்ப தப்பு ப்ரோ. இதற்கிடையே நம்ம பசங்க ஸ்லீப்பர் செல் மாதிரி வந்து TVK for TN என்று டிரெண்ட் பண்ணிட்டாங்க. நம்ம ஊரு சுயமரியாதைக்கான ஊரு. நம்ம எல்லா மொழியையும் மதிப்போம். அதற்கான மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி கல்வி கொள்கையை கேள்விக்குறியாகி வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி விடுவது? அதனால் தமிழக வெற்றி கழகம் சார்பாக இந்த மும்மொழிக் கொள்கைகளை உறுதியாக எதிர்ப்போம். தைரியமா இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என விஜய் கூறியுள்ளார்.
