
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுகவினரால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, இது பீருக்காக வந்த கூட்டம் அல்ல ரத்தம் கொடுப்பதற்காக வந்த கூட்டம் என்றார். பின்னர் பாமகவில் உள்ள பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் செல்லூர் ராஜு அதற்கு பதில் கூற மறுத்துவிட்டார். மேலும் முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் திமுக இளைஞரணி கூட்டத்தின் போது பீர் பரிமாற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.