கொச்சியில் நேற்று (பிப்ரவரி 1, 2026) நடந்த மாரத்தான் போட்டியில், தந்தை ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மார்போடு அணைத்தபடி கேரியரில் சுமந்து கொண்டு ஓடியது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த தந்தை, ஒரு கையில் பாட்டிலை வைத்துக்கொண்டு, மற்றொரு கையால் குழந்தையின் தலையைத் தாங்கியபடி கூட்டத்தோடு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மாரத்தான் ஓடும் வேகத்தில் குழந்தை நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாலும், அங்கிருந்தவர்களும் நெட்டிசன்களும் இதைப் பார்த்து நெகிழ்வதற்குப் பதிலாக கடும் அதிருப்தியையும் கவலையையும் தெரிவித்து வருகின்றனர். இந்தச் செயல் ஒரு சாகசமாகத் தெரிந்தாலும், குழந்தையின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கு இது மிகவும் ஆபத்தானது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

പിഞ്ച് കുഞ്ഞുമായി മാരത്തോണിൽ പങ്കെടുത്ത് അച്ഛൻ |Nammude Run Marathon Kochi
byu/Rajar98 inKerala

“குழந்தையின் முதுகெலும்பை அதிர்வுகளைத் தாங்கும் கருவியாக மாற்றாதீர்கள்” என்றும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் குழந்தையைத் தள்ளுவண்டியில் (Stroller) அழைத்துச் சென்றிருக்கலாம் அல்லது வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கலாம் என்றும் மக்கள் கோபமாக பதிவிட்டுள்ளனர். தந்தை-பிள்ளை பாசத்தைப் பறைசாற்ற நினைத்த இந்த முயற்சி, தற்போது பொறுப்பற்ற செயல் மற்றும் அலட்சியம் என்ற விமர்சனத்திற்கு உள்ளாகி மாரத்தான் அமைப்பாளர்கள் மீதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.