முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்திருந்தோம். மேலும் முல்லைப் பெரியாறு இடிக்கப்பட்டால் தென் தமிழகம் பாலைவனமாகும் என தெரிவித்துள்ளார்.