
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. கடந்த தேர்தல்களில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் அடுத்த தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் பாஜக மற்றும் அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
ஆனால் அதிமுகவினர் அதனை மறுக்கும் நிலையில் தனித்து தான் ஆட்சி அமைப்போம் எனவும் எடப்பாடி பழனிசாமி நான் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் தெளிவாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறுகிறார். இந்நிலையில் தற்போது அதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்று =ம் தேர்தலுக்காக அதிமுக தற்காலிகமாக தான் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது என்றும் கூறினார்.
அதோடு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பாஜகவின் திட்டம் ஒருபோதும் பலிக்காது. இது தற்காலிக கூட்டணி தான் என அவர் கூறியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை அன்வர் ராஜா கடுமையாக விமர்சித்ததால் அவரை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் மீண்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் மீண்டும் பாஜகவை விமர்சித்துள்ளதால் அவரை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கலாம் என்று கூறப்படுகிறது.