சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்றின் அபாரமான வலிமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக யானைகள் அமைதியானவை என்றாலும், அவற்றின் பலம் மலைக்கத்தக்கது என்பதற்கு இந்தத் துணுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

அந்த வீடியோவில், சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு கனரக டிராலியை, அந்த யானை தனது தும்பிக்கையாலும் தலையாலும் மிகச் சாதாரணமாக முட்டித் தூக்குகிறது. ஒரு விளையாட்டுப் பொம்மையைத் தூக்குவது போல மிக எளிதாக அந்தப் பெரிய வாகனத்தை அது கவிழ்ப்பது பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.

“>

இந்த ஊடகத்தால் பகிரப்பட்டு, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், யானையின் அசாத்தியமான தசை வலிமையைக் கண்டு வியந்து “இயற்கையின் உண்மையான பாகுபலி” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே சமயம், யானைகள் இவ்வளவு கோபமடைவதற்குக் காரணம் காடுகள் அழிக்கப்படுவதும், அவற்றின் பாதையில் மனிதக் குறுக்கீடுகள் அதிகரிப்பதுமே என்று விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ, விலங்குகளின் எல்லையில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.