நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக, காயத்திலிருந்து மீண்டு விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணியை வழிநடத்தி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.

ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் 82 ரன்கள் விளாசி அசத்திய அவர், ஜெய்ப்பூரில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் களமிறங்கியபோது ஒரு பயங்கரமான விபத்தை எதிர்கொண்டார்.

4-வது வரிசையில் பேட்டிங் செய்ய வந்த ஸ்ரேயாஸ் ஐயர், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே நிலைகுலைந்து போனார். பஞ்சாப் பந்துவீச்சாளர் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, ‘புல்லட்’ வேகத்தில் வந்து நேராக ஸ்ரேயாஸின் ஹெல்மெட்டைத் தாக்கியது.

 

View this post on Instagram

 

A post shared by Punjab Kings (@punjabkingsipl)

பந்தின் வேகம் மற்றும் தாக்கத்தைப் பார்த்ததும் சக வீரர்களும் ரசிகர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். நல்லவேளையாக அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சில நிமிடங்கள் ஓய்வுக்குப் பின், அதே பந்துவீச்சாளரின் ஓவரில் ஒரு ‘மாஸ்’ பவுண்டரி அடித்து ஸ்ரேயாஸ் பதிலடி கொடுத்தது மைதானத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.