ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ‘ஓமிட்’ போதை ஒழிப்பு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், சுமார் 400 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஆப்கான் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை “மன்னிக்க முடியாத கோழைத்தனமான வன்முறை” என்று சாடியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அப்பாவி மக்கள் தங்கியிருந்த இடத்தை ராணுவ இலக்கு என்று பாகிஸ்தான் கூறுவது ஒரு மிகப்பெரிய பொய் என்றும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

ரமலான் மாதத்தில் நிலவி வரும் இந்தப் போர் பதற்றம் பிராந்திய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு பாகிஸ்தானை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்குத் தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.