மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக இரண்டு வாக்குகளும் பதிவாகியுள்ளன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த மசோதா நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு வழிவகை செய்யும்.

இந்நிலையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ஒரு பெரிய பொய் என்றும், பெண்கள் ஏமாற வேண்டாம் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘எச்சரிக்கை: இது மிகப்பெரிய பொய். பெண்களே இதுபோன்ற ஆண்களிடம் கவனமாக இருங்கள். இந்த நாடகம் தேர்தலுக்காக மட்டுமே” என்று தெரிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு மசோதா 2024 தேர்தலுக்கு பொருந்தாது என்று அமித்ஷா கூறிய கருத்துக்கு பிரகாஷ் ராஜ் இப்படி ட்வீட் செய்துள்ளார்