தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய், தன்னிடம் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பதாகவும், உரிய நேரத்தில் கடந்த கால தி.மு.க. அரசாங்கத்தின் ஊழல் கோப்புகளை அம்பலப்படுத்தப் போவதாகவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் ,  சட்டமன்றம் என்பது திரைப்பட வசனங்களைப் பேசி கைத தட்டும் இடம் கிடையாது என்று விஜய் தரப்பைக் கடுமையாகச் சாடிய உதயநிதி, “சட்டமன்றத்தில் படங்களைப் போல சத்தமாகக் கத்தி பஞ்ச் டயலாக் பேசக் கூடாது” என்று வெளிப்படையாகவே விமர்சித்தார்.

மேலும் உங்களிடம் கடந்த தி.மு.க. அரசாங்கத்தின் ஊழல் கோப்புகள் இருப்பதாகச் சொல்கிறீர்களே, தைரியம் இருந்தால் அந்த ஃபைல்களை உடனடியாகப் பொதுவெளியில் வெளியிடுங்கள். அதில் உண்மையான முறைகேடுகள் இருந்தால், தாராளமாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள்; நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயார்” என்றார்.