மத்திய அமெரிக்கா அல்லது அமேசான் காட்டுப் பகுதிகளில் காணப்படும் ஜாகுவார் ஒரு கொடூரமான வேட்டையாடும் விலங்கு. ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், அதே ஜாகுவாரை ஒரு சாதாரண காகம் துணிச்சலுடன் மிரட்டும் காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் வெளியில் செல்லப்பிராணியாக கட்டப்பட்டிருந்த ஜாகுவார் அருகே, ஒரு காகம் அதன் மீது தொடர்ந்து குரல் எழுப்பி, பலமுறை நெருங்கி வருவதைக் காணலாம்.

பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், அந்த ஜாகுவார் காகத்தைத் தாக்காமல், அதிலிருந்து விலகிச் செல்வதற்குப் போராடியது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “காகத்தின் துணிச்சல் ஜாகுவாரின் ஆணவத்தைத் தகர்த்தது” என்று கருத்து தெரிவிக்கின்றனர். @alexanderkremen என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, எளியவனின் தைரியம், பெரியவனை முறியடிக்கக்கூடிய சக்தி கொண்டது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Alexander Kremen (@alexanderkremen)