இயற்கையின் விசித்திரமான காட்சிகளைப் பார்த்தால் மனிதர்கள் ஆச்சரியப்படுவது வழக்கம். அதுபோல, சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அதில், ஏரியின் நடுவே ஆமைகள் ஒரு வட்டமாக கூடி அமர்ந்து “மனிதர்களைப் போல கூட்டம் நடத்துவது” போன்ற காட்சி பதிவாகியுள்ளது. வட்ட மேசை மாநாட்டைப் போல காட்சி தரும் இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்துடன் புன்னகை பூக்கின்றனர்.

இந்த காணொளியில் சில ஆமைகள் வட்டத்தின் நடுவில் அமர, மற்றவை அதைச் சுற்றி கவனமாக இருந்தன. அந்த காட்சி, அவை தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளதோ அல்லது தொழிற்சங்கக் கூட்டத்தில் பங்கேற்கிறதோ என்று நினைக்க வைக்கிறது. மனிதர்களைப் போலவே ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது போல் தோன்றியதால், இதுபோன்ற காட்சியை இதுவரை பார்த்ததில்லை என சமூக வலைதள பயனர்கள் கூறுகின்றனர்.

“>

 

இந்த வீடியோவை Nature is Amazing என்ற பக்கம் ஆகஸ்ட் 18 அன்று வெளியிட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். “என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட காட்சியைப் பார்த்ததில்லை” என ஒருவர் கருத்து தெரிவித்தார்.

“ஆமைகள் மனிதர்களைப் போலவே கூட்டம் நடத்துகின்றன போல” என இன்னொருவர் குறிப்பிட்டார். இயற்கையின் ரகசியங்கள் இன்னும் மனிதர்களுக்கு முழுமையாக புரியாத நிலையில், இத்தகைய காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.