இணையத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் காணொளி ஒன்றில், பூனைக்கும் பாம்புக்கும் இடையிலான வித்தியாசமான சண்டை காட்சிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன.
பொதுவாக, பாம்பைக் கண்டால் எல்லா உயிரினங்களும் பீதி கொள்ளும் நிலையில், ஒரு பூனை அந்த பாம்பை அடித்துத் தும்சம் செய்வது போன்ற காட்சிகள் இது. Nature என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பூனை மீது பாய முயன்ற பாம்பு கடுமையாக தாக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் ஓட முயன்றும் பூனையின் அடிகளால் திணறுவதை காணலாம். இறுதியில், பாம்பு நெளிந்து வலியுடன் நகரும் காட்சியால் வீடியோ முடிகிறது.
Cats must be watching the world in slow motion pic.twitter.com/A7dTH9lBsw
— NATURE (@WrldOFNature) August 21, 2025
“>
இந்த வீடியோ ஆகஸ்ட் 21 ஆம் தேதி X -தளத்தில் பதிவேற்றப்பட்டதுடன், தற்போது வரை 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “இது சாதாரண பூனை இல்லை, வீர பூனை!” என புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை தொடர்ந்து, பூனைக்கும் பாம்புக்கும் இடையிலான தைரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
