பிரான்சின் கிராமப்புறப் பகுதிகளில் சில மான்கள் போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காடுகளில் வளரும் குறிப்பிட்ட சில தாவரங்கள் அல்லது பழங்களை உண்பதால் ஏற்படும் இந்த போதை, மான்களின் சமநிலையை முற்றிலுமாகச் சிதைக்கிறது.
இதனால் அவை சுயநினைவின்றி ஒரே இடத்தில் வட்டமிடுவது மற்றும் விசித்திரமான அசைவுகளைச் செய்வது என வினோதமாக நடந்துகொள்கின்றன.இந்தச் சூழலில், போதை ஏறிய மான்கள் வாகனங்கள் மற்றும் மனிதர்களைக் கண்டு அஞ்சாமல் சாலையின் குறுக்கே வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஒரு நியூஸ் நிறுவனத்தின் தகவலின்படி, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த உள்ளூர் காவல்துறை, கிராமப்புற மற்றும் வனச் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரப்பூர்வ ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
நெட்டிசன்கள் சிலர் இதனை ‘பார்ட்டி மோட்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், விலங்கின ஆர்வலர்கள் அதன் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
