
சென்னையில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற பிராமணர் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சம்மன் அனுப்ப சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி ஜாமீன் கேட்டு மனிதாக்கல் செய்த நிலையில் அதனை விசாரித்த நீதிமன்றம் தெலுங்கர்கள் குறித்த அவதூராக பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு தெலுங்கு பேசும் மக்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் தான் என்று கூறியதோடு அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்த நிலையில் காவல்துறையினர் வலை வீசி தேடி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது கஸ்தூரிக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நடிகை கஸ்தூரி தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு அதனை அப்படியே விடலாம். ஆனால் அவர் பேசியதை விட சிலர் மோசமாக பேசுகிறார்கள். கஸ்தூரி மீதான நடவடிக்கை என்பது ஒரு அரசியல் பழிவாங்கல். என்னைப் பற்றி கூட சிலர் இணையதளத்தில் மோசமாக பேசியுள்ளதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். நான் நடிகை கஸ்தூரி பேசியதை அவ்வளவு பெரிய குற்றமாக கருதவில்லை. மேலும் அவர் மீதான நடவடிக்கை என்பது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தை கொண்டது என்று கூறினார். சீமான் திடீரென கஸ்தூரிக்கு ஆதரவு கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது