இந்தியாவில் தற்போதைய அரசியல் சூழலில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்திற்காக நாட்டின் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாகத் தாக்கியுள்ளது.
இது குறிப்பாக, அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக எழுந்துள்ள புகார்கள், நாட்டின் ‘ஆற்றல் இறையாண்மை’ கேள்விக் குறியாகிவிட்டதைக் காட்டுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ट्रम्प का नया खेल
दिल्ली दोस्त को कहा
पुतिन से ले सकते हो तेल
कब तक चलेगा
यह अमेरिकी ब्लैकमेल pic.twitter.com/GTmITbEGPN— Jairam Ramesh (@Jairam_Ramesh) March 6, 2026
“>
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், இந்தியா யாருடைய அனுமதியைப் பெற்று எண்ணெய் வாங்க வேண்டும் என்ற நிலை உருவானது துரதிர்ஷ்டவசமானது என்று விமர்சித்துள்ளனர். அமெரிக்கா 30 நாள் கால அவகாசம் வழங்கியிருப்பதை “அமெரிக்காவின் மிரட்டல்” என்று வர்ணித்துள்ள காங்கிரஸ், வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தனது தனித்துவத்தை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும் வகையிலும், அமெரிக்காவின் வர்த்தகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாகக் கூறி, இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
