உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி பதினெட்டு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். இதையடுத்து விவகாரத்திற்கான காரணத்தை கேட்ட நீதிபதி அந்த பெண் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது அந்த பெண் தன்னுடைய கணவர் தன்னை மிகவும் அன்பாக நடத்துவதாகவும்,  தன்னோடும் சண்டை சச்சரவுகளே இல்லை என்று கூறிய அந்தப் பெண் தனக்கு விவகாரத்துக்கு வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ன்னுடைய கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதை கேட்ட நீதிபதி விவகாரத்து மனுவை நிராகரித்துள்ளார். இந்த நிலையில் இந்த செய்தியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.