இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக முறையில் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஐபிஎல் போட்டியில் மும்பைமற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் ஆர்.சி.பி மற்றும் சிஎஸ்கே இடையேயான போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தோனி மற்றும் விராட் கோலியின் போட்டியை காண ரசிகர்கள் பலரும் ஆர்வத்தோடு இருக்கும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி தொடங்க இருக்கிறது. ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரண்டு அணிகளுமே வெற்றியுடன் தொடங்கிய நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்கும் விதமாக தற்போது சிஎஸ்கே நிர்வாகம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிஎஸ்கே வீரர்களின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளனர். அதன்படி எம் எஸ் தோனி 864 ரன்கள், சிவம் துபே ஸ்டிரைக் ரேட் 158, ஜடேஜா 26 விக்கெட்டுகள், அஸ்வின் 24 விக்கெட்டுகள் ஆகியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதுவரையில் சென்னை மற்றும் ஆர்சிபி இடையே நடைபெற்ற 9 போட்டிகளில் சிஎஸ்கே 8 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் இதன் காரணமாக இன்று நடைபெறும் போட்டியில் தோனியின் மேஜிக் ஜெயிக்குமா இல்லை விராட் கோலியின் ஆக்ரோஷம் ஆட்டத்தை திருப்புமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.