தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த வீடியோவில் பேசும் அவர், இன்னும் இரண்டு நாட்களில் நான் எப்படி செத்துப் போனேன் என கர்நாடக மாநிலம் உங்களுக்கு தெரிவிக்கும். என்னோட மரணத்தை பற்றி விளக்கம் கொடுக்க சீமானுக்கு அழைப்பு விடுக்கும். இந்த மாதிரி ஒருத்தர் தமிழ்நாட்டுக்கு வேணுமா வேண்டாமா என நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்று விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.