சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்காமல் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் விபரீதத்தை உணர்த்தும் வகையிலான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் தனது பையுடன் சாலையோரம் நின்று கொண்டிருக்கிறார். அவர் ஆட்டோ அல்லது வாடகை கார் எதற்காவது காத்திருந்ததாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக, மின்னல் வேகத்தில் வந்த ஒரு கருப்பு நிற கார், அந்தப் பெண் மீது பயங்கரமாக மோதியது.

காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், அதன் காற்று வீச்சிலேயே நிலைதடுமாறிய அந்தப் பெண், காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தால், தற்காத்துக் கொள்ளக் கூட அவருக்கு அவகாசம் கிடைக்கவில்லை.

 

 

சாலை விதிகளைப் பின்பற்றாமல் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. ஓட்டுநர்களின் சிறிய கவனக்குறைவு மற்றும் வேகக் கட்டுப்பாடு இல்லாதது ஒருவரது உயிரையே பறிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இச்சம்பவத்தை வீடியோவில் பார்த்த நெட்டிசன்கள், “சாலைகளில் ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருப்பது அவசியம்” எனத் தங்கள் கவலையைப் பகிர்ந்து வருகின்றனர்.

பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போதும், ஓரங்களில் நிற்கும் போதும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல், வாகன ஓட்டிகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வேகக் கட்டுப்பாட்டை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது