தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இதில் 1768 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருந்தது.

ஆனால் தற்போது தேர்வு தேதியை மாற்றுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 21ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.