தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (நவம்பர் 25) இடி, மின்னலூடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.