குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம் மேல்முறையீடு செய்த 7.53 லட்சம் பேருக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் 7.35 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கு விரைவில் SMS அனுப்பப்படும் எனவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், இதுவரை விடுபட்ட மாதங்களுக்கான ( செப்., அக்., நவ.,) ஆகிய 3 மாத தொகையுடன் டிசம்பரில் ரூ.4000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.