டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், ஹரியானாவில் இருந்து கூடுதல் நீர் வழங்கு உத்தரவிட்ட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமானது இமாச்சல பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை தடுக்கக்கூடாது என்று அரியானா மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து. இருந்தும் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாட்டு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

பல பகுதிகளிலும் மக்கள் தண்ணீர்க்கு அள்ளல்படும்  நிலைமை உருவாகி உள்ளது. இதனிடையே டெல்லி மாநில மந்திரி ஹரியானா அரசு தண்ணீர் விருந்து விட கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கிய நிலையில் டெல்லியில் நேற்று பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி  தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள் .அப்போது போராட்டக்காரர்களை கலைப்பதற்காக டெல்லி காவல்துறை தண்ணீரை பீச்சி அடிக்கும் பீரங்கிகளை பயன்படுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது . இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.