மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்கள் தாயகம் திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து அணி மட்டும் ரகசியமாக ‘எஸ்கேப்’ ஆன நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியாவிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனால் செல்வாக்கு மிக்க கிரிக்கெட் வாரியங்களுக்கு மட்டும் ஐசிசி சாதகமாகச் செயல்படுவதாக மைக்கேல் வாகன், டேரன் சமி மற்றும் குயிண்டன் டி காக் போன்றோர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள ஐசிசி, இங்கிலாந்து அணி பயணித்த வான்வழிப் பாதை பாதிக்கப்படாததால் அவர்கள் முன்கூட்டியே கிளம்பிவிட்டதாகவும், வளைகுடா நாடுகள் வழியாகச் செல்ல வேண்டிய மற்ற அணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை என்றும், திங்கட்கிழமைக்குள் அனைத்து வீரர்களும் தனி விமானம் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.