கேரள மாநிலத்தை சேர்ந்த சான்ட்ரா சஜூ என்ற பெண் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். இவர் இந்த மாதம் ஆறாம் தேதி காணாமல் போனதாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் எடின்பர்க்கிற்கு அருகிலுள்ள நியூபிரிட்ஜ் அருகே ஆற்றில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இது காணாமல் போன சான்ட்ரா சஜூ என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.