தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரை, வெறும் 1 பைசா மட்டுமே கட்டணமாகக் கோரி ‘ஜோய் ஆலுக்காஸ்’ (Joyalukkas) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மோதிரங்களுக்கான தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, முழு திட்டத்திற்குமான சேதாரம், செய்கூலி, ஹால்மார்க் முத்திரை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து கூடுதல் செலவுகளுக்கும் மொத்தமாகவே 0.01 ரூபாய் (1 பைசா) மட்டுமே கட்டணமாகப் பெறுவதாக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டுள்ளது.
மிகக் குறைந்த தொகையைக் கோரியதன் அடிப்படையில், அந்நிறுவனம் ‘L1’ நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டெண்டர் புள்ளிகளின் விவரம் (ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில்):
L1 – ஜோய் ஆலுக்காஸ் (Joyalukkas India Ltd.): ₹0.01 (1 பைசா)
L2 – ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் (GRT Jewellers): ₹410.97
L3 – வும்மாடி பங்காரு ஜூவல்லர்ஸ் (VBJ): ₹822.97
L4 – டைட்டன் நிறுவனம் (Titan Company Ltd.): ₹832.24
L5 – மலபார் கோல்ட் (Malabar Gold & Diamonds): ₹871.38
L6 – எமரால்டு ஜூவல் (Emerald Jewel Industry): ₹947.60
L7 – கே.டி.எம் ஜூவல்லரி (The KTM Jewellery Ltd.): ₹964.08
L8 – மோகன்லால் ஜூவல்லர்ஸ் (Mohanlal Jewellers): ₹977.47
L9 – கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers): ₹978.50
L10 – ஜாவேரி அண்ட் கோ (Zaveri and Company): ₹1,325.61
L11 – சரவணா ஸ்டோர்ஸ் (Saravana Stores Jewel Super): ₹15,356.27
முன்னணி தங்க நகை நிறுவனங்கள் பலவும் போட்டியில் பங்கேற்ற நிலையில், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையைக் கோரி இப் பெரிய ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
