ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. இது தொடர்பாகத் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் (Fact Check) நடத்திய ஆய்வில், இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்துள்ளது.

​உண்மையில், ஆவின் நிறுவனம் தற்போது ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ (Green Magic Plus) என்ற புதிய வகை பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலைதான் மாற்றமடைந்துள்ளதே தவிர, மக்கள் வழக்கமாக வாங்கும் பழைய ‘ஆவின் கிரீன் மேஜிக்’ பால் பாக்கெட் இப்போதும் அதே 22 ரூபாய் (அரை லிட்டர்) விலையில்தான் கடைகளில் விற்கப்படுகிறது. எனவே, பால் விலை உயர்வு குறித்த வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.