
தமிழகத்தில் ஆவின் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தியில், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் பாலாக அமைக்க விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்சமாக 3. 75 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இதில் விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஆவின் பாலகம் அமைக்க பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.