ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் திங்கள்கிழமை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஆழ்துளை கிணற்றில் 150 அடி ஆழத்தில் சிறுமி சேத்னா சிக்கி இருப்பதாகவும் அவருக்கு குழாய் மூலமாக ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிறுமியை கண்காணிக்க ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராவும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

https://x.com/ians_india/status/1871267237543498131