ரயில் பயணங்களின் போது விற்கப்படும் உணவுப் பொருட்கள் எந்தளவுக்குச் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுகின்றன என்ற அச்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓடும் ரயில் பெட்டி ஒன்றில், பயணிகள் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பெரிய சமோசா தட்டின் ஓரத்திலேயே தனது காலைத் தூக்கி வைத்தபடி, ஒரு தின்பண்ட வியாபாரி எந்தவித கவலையும் இல்லாமல் ஜாலியாக செல்போன் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
और खाओ टेस्टी समोसे….😠
कीच़ड तेल और पैर का मैल एक साथ 🤦🤕😠 pic.twitter.com/giBdpcCapO— अर्चना त्यागी–भारतीय किसान संघ 🇮🇳🇮🇳 (@Mrs_Tyagiji) May 26, 2026
பயணிகளின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இந்த அருவருப்பான செயலை ரயிலில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, அது நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பயணிகளின் புகாரை ஏற்றுக்கொண்ட ஐஆர்சிடிசி (IRCTC) நிர்வாகம், சம்பந்தப்பட்ட அந்த சமோசா வியாபாரி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
