
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், அந்நாட்டு மூத்த அரசு அதிகாரியிடம் நடந்ததாக கூறப்படும் பழைய தொலைபேசி உரையாடல் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி, உலக அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசி ஊடகம் உறுதிப்படுத்தியதாக கூறும் இந்த ஆடியோவில், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களை ஒடுக்க, மாணவர்களைக் கண்ட இடத்திலேயே சுட்டு கொல்லுமாறு ஹசீனா நேரடியாக உத்தரவு அளிக்கும் குரல் கேட்கப்படுகிறது.
இந்த ஆடியோ 2024-ம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி, வங்கதேச அரசின் அதிகாரப்பூர்வ தலைமையகம் ‘கணபபனில்’ இருந்து இடம்பெற்ற தொலைபேசி அழைப்பின் போது பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, டாக்கா நகரம் முழுவதும் இராணுவ துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வன்முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் பதிவுகளையும், பிபிசி மேற்கோள் காட்டியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
தற்போது, இந்த ஆடியோ உண்மையானது என்பதை தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்திய நிலையில், மாணவர் போராட்டங்களில் மனிதாபிமான மீறல்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு நேரடி உத்தரவுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஷேக் ஹசீனாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த ஆடியோ வெளிவந்த விதம், அதனுடைய நேர்மையை சர்வதேச நிபுணர்கள் தீவிரமாக பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.