பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருடைய கோரையில் கைமாறிய பணம் குறித்தும், கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்தும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு (எ) வினோத்தின் வங்கி பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ய திருவள்ளூர் வழக்கறிஞர் அருள் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ய திருவள்ளூர் வழக்கறிஞர் அருள் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது கொலைக்கு பயன்படுத்தி ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்ததும் கொலைக்கு பின்னர் ஆயுதங்களை பதுக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொடுத்ததும் அருள் தான் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.