“ஜென்சி டிஎம்கே மீட் அப்” (Genz DMK Meet up) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணி நிர்வாகி வெற்றிச்செல்வன், எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப கட்சி என்ற விமர்சனங்களுக்கு மேடையிலேயே மிக அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். “நாளைக்கு சோஷியல் மீடியாவில் யாராவது ஒருத்தன் இந்த கூட்டத்தில் 50, 60 வயதானவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று போட்டோவை ஜூம் செய்து ரவுண்ட் பண்ணி காட்டுவான். ஆனால், என் கண்ணுக்கு அங்கே அமர்ந்திருக்கும் ஒரு வயது குழந்தையும், ஐந்து வயது குழந்தையும், அவர்களின் அம்மாவும், பாட்டியும்தான் தெரிகிறார்கள்” என்று கூறி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.

​மேலும் பேசிய அவர், “ஆமாம், இது குடும்ப கட்சிதான்! ஒட்டுமொத்த குடும்பமும் சாரை சாரையாக வந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்ப கட்சிதான்” என மிக லாவகமாக விமர்சனங்களை மாற்றிப் பேசி அப்ளாஸ் அள்ளியுள்ளார். “திமுகவில் இளைஞர்களே இல்லை” என்று தொடர்ந்து பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு மத்தியில், திரண்டிருந்த ‘ஜென்சி’ தலைமுறையினரைக் காட்டி அவர் பேசிய இந்த விறுவிறுப்பான பேச்சு, தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.