சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுப்பையா என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் புற்று நோய் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கும் நிலையில் ஆப்ரேஷன் தியேட்டரில் ஒரு செவிலியருடன் தகாத முறையில் நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ ‌ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  சுப்பையா காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மருத்துவர் சுப்பையா மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வார காலத்தில் அறிக்கை வந்து விடும். அதன் பிறகு சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர் துறை ரீதியாகவும் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.