இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஸ்காட்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய பின்னர், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா என் நண்பர் என்றாலும், இந்தியா வேறு எந்த நாட்டையும் விட அதிக வரிகளை வசூலிக்கிறது. எனவே இந்தியாவுடனான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை,” என தெரிவித்துள்ளார்.

மேலும், மே 2025-இல் நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான போர் நிலை முடிவுக்கு வந்தது தனது வேண்டுகோளினால்தான் எனவும் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் இப்போரில் நுழையவில்லை என பி [ பிரதமர்  மோடி பார்லிமென்டில் மறுத்துள்ள நிலையில், மீண்டும் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி இறுதி முடிவை நோக்கி இந்தியா தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இரு நாடுகளும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், முக்கியமான கருத்து வேறுபாடுகள் இன்னும் நிலவுகின்றன. எனினும், சமீபத்திய வாரங்களில் டிரம்ப், “ஒரு உறுதியான ஒப்பந்தத்திற்கு நெருக்கமாக வந்துள்ளோம்” என கூறியிருந்தார்