நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியமான ஒன்று. ஆக்ஷியம் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். விண்வெளி துறையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்தியாவின் பலத்தைக் கண்டு ஆபரேஷன் சிந்தூரில் உலக நாடுகள் வியந்தது. பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம். பயங்கரவாதிகளின் இருப்பிடங்களுக்கு சென்று அவர்களை தீரத்துடன் அழித்துள்ளோம். ஆப்ரேஷன் சிந்தூரின் போது 100% தீவிரவாத இலக்குகள் அழிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. மேலும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் என்பது புதிய திட்டங்களுக்கான கூட்டத்தொடர் என்றார்.