ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் அருகே 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்..

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலப்பரப்பிலிருந்து பூமிக்கு அடியில் 113 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 6:07 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. 2-வதாக காலை 6:25 மணிக்கு பைசாபாத்தில் இருந்து 259 கிலோமீட்டர் தொலைவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 150 கிலோமீட்டர் ஆழத்தில் இரண்டாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது.

3-வது முறையாக காலை 7:05 மணிக்கு பைசாபாத்திலிருந்து 279 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது. தொடர்ந்து 4-வது முறையாக பைசாபாத்தில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.37 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.

இந்நிலையில் 5வது முறையாக பைசாபாத்தில் இருந்து 287 கிலோ மீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானது. காலையில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பகல் 12 : 15 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்..