குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பெண் வணிக கூட்டாளியை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, இணையத்தில் பரவலாக வைரலாகியுள்ளது.
தகவலின்படி, சம்பவம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஷீதல்பார்க் அருகிலுள்ள ‘தி ஸ்பைர்-2’ கட்டிடத்தில் நடைபெற்றது. இதில், மௌலிக் நட்பாரா என அடையாளம் காணப்பட்ட நபர், தனது பெண் வணிக கூட்டாளியை அலுவலகத்தில் கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
ભૂલ ગમે તે હોય, ગમે તેટલી મોટી હોય પણ કોઈ સ્ત્રી સાથે એક પુરુષનું આ પ્રકારનું વર્તન બિલકુલ યોગ્ય નથી.
રાજકોટમાં એક ઓફિસમાં યુવતીને માર મારતા CCTV ફુટેજ સામે આવ્યા
ઘટના જૂન ૨૦૨૫માં બની
સવાલ ઘણા ઉઠે કે હવે ચેક ફરિયાદ કેમ થઈ?યુવતીના ધંધાકીય ભાગીદાર મૌલિક નાદપરા નામના શખ્સે જ… pic.twitter.com/WUMz32G5wU
— Nidhi patel (@nidhirpatel6) December 11, 2025
ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை, நட்பாரா முடியில் இழுத்து கீழே தள்ளி, தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. மேலும், மற்றொரு வீடியோவில், அந்தப் பெண்ணின் மகள் முன்னிலையில் கூட அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
36 வயதான அந்தப் பெண், ரூ.60 லட்சம் கடன் வாங்கி பேக்கேஜிங் தொழிலைத் தொடங்கியதாகவும், வியாபாரத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டபோது கோபமடைந்து தன்னைத் தாக்கினார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இதில், குற்றம் சாட்டப்பட்ட மௌலிக் நட்பாரா கைது செய்யப்பட்டார்.
