ஜார்கண்ட் சுகாதாரத்துறை மந்திரியான பன்னா குப்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் ஆபாசமான கோலத்தில் ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசுவது உள்ளிட்ட வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் தொடர்பாக பன்னா குப்தா நிரூபர்களுக்கு பேட்டி அளித்ததாவது “என் நற்பெயரை கெடுக்க சதி நடைபெறுகிறது.

எந்த விசாரணையையும் சந்திக்க தயாராகவுள்ளேன். இதனிடையே காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளேன். என் செல்போனையும், அந்த பெண்ணின் செல்போனையும் வாங்கி சரிபார்க்கும்படி காவல்துறையினரிடம் கூறியுள்ளேன்” அவர் தெரிவித்தார்.