நாடு முழுவதும் இருக்கும் அனைத்து மாநிலங்களிலில் இருந்து சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் படிக்க மத்திய அரசு பதோ பர்தேஷ் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இத்திட்டம் வாயிலாக முஸ்லீம், கிறிஸ்தவர்கள், ஜெயின், புத்தமதம் போன்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளி நாடுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இத்திட்டம் தேசிய அளவில் சென்ற 2006-ம் வருடம் நடைமுறைபடுத்தப்பட்டது. அதோடு 2021-22 கல்வி ஆண்டில் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கடந்த வருடம் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. அத்துடன் இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த காலங்களில் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என ஒப்பீடு ஆய்வு செய்வதற்காக தகவல் பெறும் உரிமைச சட்டத்தில் தகவல் கேட்கப்பட்டது.

இதுபற்றி சமூகநல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, வருடந்தோறும் இத்திட்டம் வாயிலாக பெரும்பாலான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். எனினும் கடந்த வருடம் இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதியில் இருக்கின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு 2023-24 கல்வி ஆண்டில் இத்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.