இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே சமயம் லோன் செயலிகள் மூலமும் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். அதன்படி லோன் செயலிகளின் மூலம் வாங்கும் கடன்களை அவர்கள் திருப்பி வசூலிக்கும் முறை மிக கொடூரமாக இருக்கிறது.

சமீபத்தில் மும்பையில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் செயலி ஒன்றில் லோன் எடுத்ததாகவும் அதை திருப்பி செலுத்த தாமதமானபோது மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை அனுப்பி மிரட்டியதாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது போன்ற லோன் செயலிகளிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.