
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் முகாம்கள் குறி வைத்து அழிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்தியது. அந்த தாக்குதல்களை\ இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்தது. இதனையடுத்து தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. பயங்கரவாதிகள் தாக்குதலில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்த ஒவ்வொருவருக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் குஜராத்தின் புஜ் விமானப்படைத்தளத்தில் வீரர்கள் மத்தியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. இது வெறும் ட்ரெய்லர் தான். நேரம் வரும்போது முழு படத்தையும் உலகுக்கு காட்டுவோம் என கூறியுள்ளார்.