
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் சமரசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையும் தொடங்க மாட்டோம் என்று கூறி வருகிறோம்.
இருப்பினும் நாங்கள் தாக்கப்பட்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். இந்தியா பின்வாங்குவதை தேர்வு செய்தால் இந்த பதற்றத்தை தணிக்க நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.