இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்ற. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பரவுகின்றன. தன்னுடைய பசியை போக்குவதற்காக ஆக்ரோஷமான வேட்டையில் களமிறங்கி மற்றும் மிருகங்களை வேட்டையாடுவது திகில் காட்சியாக இருக்கும்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் வரிக்குதிரை ஒன்று மிகவும் சாதாரணமாக ஆற்றை கடந்துள்ளது. கடைசியில் கரையேறிய அடுத்த நொடியில் முதலை ஒன்று அதன் கால்களை கவ்வ வந்துள்ளது. அந்த ஆபத்திலிருந்து நொடி பொழுதில் வரிக்குதிரை தப்பித்து பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.