
13 வயது என்கிற டீனேஜ் வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்பு நாம் வாழும் சிறுவயது வாழ்க்கை தான் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் யார் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டோம் நமக்கு பிடித்த பொம்மைகளுடன் தனியாக பேசி விளையாடுவோம் நமக்கு பிடித்ததை ரசனையுடன் கண்டு மகிழ்வோம்.
அது மற்றவர்கள் பார்வையில் கேலியாக இருந்தாலும் அதைப்பற்றிய கவலை நமக்கு இருக்காது. அப்படி ஒரு குழந்தை தனக்கு பிடித்த ஒன்றை ரசனையுடன் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை ஒன்று இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறது.அவர்கள் பின்னே காரில் செல்லும் நபர் டிப்பர் லைட்டை ஆன் ஆஃப் செய்கிறார். அது அந்த குழந்தைக்கு கேமராவில் இருக்கக்கூடிய ஃப்ளாஷ் லைட் போல தெரிந்து தன்னை புகைப்படம் எடுப்பதாக கற்பனை செய்து கொண்டு டிப்பர் லைட் ஆன் ஆப் செய்யும் போதெல்லாம் க்யூட்டாக விதவிதமாக எக்ஸ்பிரஷன் கொடுத்து வந்துள்ளார்.
இதை கண்ட கார் ஓட்டுனரும் குழந்தையை மேலும் மகிழ்ச்சி படுத்த டிப்பர் லைட்டை ஆன் ஆஃப் செய்து கொண்டே இருந்தார். அதை வீடியோவாக எடுத்தும் சமூக வலைதளத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி தற்போது வரை கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram