நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.பி புதூரில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் செல்போனுக்கு பதிலாக வாசனை திரவியத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சரவணகுமார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் செல்போனுக்கு பதிலாக வாசனை திரவியத்தை அனுப்பிய ஆன்லைன் நிறுவனத்திற்கு 44 ஆயிரத்து 519 ரூபாய் அபராதம் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது. அந்தத் தொகையுடன் சரவணகுமார் ஏற்கனவே செலுத்திய தொகையையும் சேர்த்து ஆன்லைன் நிறுவனம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.